நடிகை குஷ்பு 80களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
குஷ்பு இட்லீ, குஷ்பு கோவில் என்று வைக்கும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தவர்.
சினிமாவை தாண்டி குஷ்பு அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அண்மையில் ஒரு போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் கொரோனாவால் பாதிக்கப்பட வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
தற்போது குஷ்பு கொரோனாவில் இருந்து மீண்டு தன்னை ஆக்டீவாக வைத்து வருகிறார். தொடர்ந்து ஒர்க் அவுட் செய்து வருகிறார், தனது இன்ஸ்டாவிலும் உடற்பயிற்சிக்கு பிறகு எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.