வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில், ‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்கிற இந்தப் பழமொழியை நாம் உணர்ந்துகொள்ளும் வகையில் ஒரு சம்பவமாவது நிகழும்.
இங்கு மிகவும் பொறுப்பான ஒரு சிறுவன் தனது விளையாட்டுப் பொருளான டென்னிஸ் பந்துகளை பத்திரமாக ஒரே குடுவைக்குள் எடுத்து வைக்க முயற்சி செய்கிறான்.. செய்கிறான்.. செய்துகொண்டே இருக்கிறான்.. ஆனால், ஒரு பந்துகூட அந்தக் குடுவையில் தங்கவே இல்லை.
விடாமுயற்சி வெற்றியைக் கொடுக்காத சூழலில் முயற்சிக்கும் இந்த சிறுவனின் வீடியோ பேஸ்புக்கில் மட்டும் நாற்பது லட்சம் பேர் கண்டு ரசித்து, சிரித்துள்ளனர்.. இந்த வீடியோ உங்களுக்காக..