பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாவது, “பாடகி லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பரிதித் சம்தானியுடன் பேசினேன்.
அவர் குணமடைந்து வருகிறார். சில நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார். கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்தும் அவர் குணமடைந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.