விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் மூன்றாம் சீசன் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மட்டும் ஒரு விஷயம் வித்தியாசமாக மாறி இருக்கிறது என்பதை கவனித்தீர்களா?
கடந்த சீசனில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பலரும் பாப்புலர் ஆகி சினிமாவுக்கு நடிக்க போனார்கள், ஆனால் இந்த மூன்றாவது சீசனில் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் போட்டியாளராக வந்திருக்கிறார்கள் என்பது தான் அது.
குக் வித் கோமாளி 3 ஷோவை தொகுத்து வழங்கும் ரக்ஷன் தான் இந்த விஷயத்தை பெருமையாக அறிவித்தார்.