நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை முடித்தகையோடு இப்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ல் டிசம்பர் மாதம் வந்தது, அதன்பிறகு மார்ச் மாதம் 2021ல் படத்தின் பூஜை போடப்பட்டு அந்த மாதமே போட்டோ ஷுட் எல்லாம் நடந்தது.
பின் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு இடைவேளை விட்டு எடுக்கப்பட்டது. சென்னை, டெல்லி, ஜார்ஜியா என பல இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தன.
சென்னையில் பெரிய மால் செட் போட்டு படப்பிடிப்பு நடந்ததாக கூறப்பட்டது, ஆனால் ஒரு சின்ன புகைப்படம் கூட இதுவரை வெளியானதில்லை. இந்த நேரத்தில் டுவிட்டரில் சென்னையில் போடப்பட்ட மால் செட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் பட செட் புகைப்படம் என வைரலாக்கி வருகிறார்கள்.