கமல் ஹாசன் இயக்கி, நடித்து உருவாகி வந்த திரைப்படம் மருதநாயகம். கமல் ஹாசனின் கனவு திரைப்படமும், இதுவே ஆகும்.
இப்படி பார்த்து பார்த்து எடுத்த இப்படம் பாதியிலேயே நின்றுபோனது கமல் மட்டுமின்றி அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்தது.
மீண்டும் எப்போது மருதநாயகம் படம் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் உட்பட தமிழ் திரையுலகமே காத்துகொண்டு இருந்தது.
இதுகுறித்து, சில மாதங்களுக்கு முன் கமல் பேசியிருந்த போது கூட, இனி மருதநாயகம் எடுத்தால், வேறொருவர் தான் கதாநாயகனாக நடிக்க முடியும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் மருதநாயகம் படத்தை துவங்கவுள்ளாராம் கமல் ஹாசன். சோனி பிச்சர்ஸ் உடன் கைகோர்த்து, இப்படத்தை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், மீண்டும் துவங்கவுள்ள மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதில் ஹீரோவாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.