கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன், ராதிகா சரத்குமார் சரத்குமார், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பல வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த இப்படத்திற்கு விரைவில் விக்ரம் டப்பிங் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு இந்த படத்தின் ரன் டைம் நான்கரை மணி நேரம் இருப்பதால் இதை இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்கு கவுதம் மேனன் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.