உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு ( UNESCO) 2011 நவம்பர் 3 ஆம் திகதி உலக வானொலி தினமாக அறிவித்தது.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், சர்வதேச வானொலியாளர்களுக்கு இடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதலாவது உலக வானொலி தினம் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.