சீரியல் நடிகை ஹேமா என்பதை விட கனா காணும் காலங்கள் தொடர் புகழ் ராகவி என்றால் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் பாஷா படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார், அதன்பிறகு பூவே உனக்காக, சூர்யவம்சம், சேது, காதல் கொண்டேன், மதுரை என பல படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார்.
பின் சீரியல்களில் கனா காணும் காலங்கள், தென்றல் என நடித்திருக்கிறார். ஜோடி நம்பர் 1, 3வது சீசனின் டைட்டிலையும் வென்றார்.
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்.
அப்படி அவரது ஒரு வீடியோ ரசிகர்களிடம் அதிகம் பரவ அட நம்ம ராகவியா இது குண்டாகி ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்,