நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய்க்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் விஜய் தனது மனைவி மற்றும் காதல் குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில் ” காதலிச்சு கல்யாணம் பண்றது ஒரு வகை. கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலிக்கிறது மற்றொரு வகை. நான் அதில் இரண்டாவது ஜாதி. காதலிக்க, கல்யாணம் பண்ண, பொண்ணு தேடுற ஒவ்வொரு பையனுக்கும் இருக்குற எதிர்பார்ப்பு, நம்ம அம்மா மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கணும் என்பது தான். நான் எதிர்பார்த்தது போலவே அதே பாசம், கோபம், அன்பு, கண்டிப்பு சங்கீதா கிட்ட இருக்கு. சங்கீத எனக்கு இன்னோரு அம்மா ” என கூறியுள்ளார்.