நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் வரும் 24 ஆம் திகதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.
தினமும் வெளியாகும் வெளியாகி வரும் வலிமை படத்தின் அதிரடி ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
வலிமை படத்தின் முன்பதிவு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பை பார்த்து இப்படம் முதல் நாளிலே 30 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் Run-Time குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் 33 நிமிடங்கள் , இரண்டாம் பாதி 1 மணிநேரம் 26 நிமிடங்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
எனவே மொத்தமாக வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணிநேரம் திரைப்படம் என்பது தெரியவந்துள்ளது.