இந்தியளவில் கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இருந்தது வலிமை.
சமீபத்தில் பயங்கர எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
மேலும் வலிமை திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் வலிமை பட வசூல் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி வலிமை படம் அங்கு 4 நாட்களில் SG$651K / ரூ. 3.61 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதற்கு முன் அங்கு விவேகம் திரைப்படம் தான் அங்கு அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்தது, ஆனால் தற்போது வலிமை அதை விட அதிகமாக வசூல் செய்து அஜித்தின் திரைப்பயணத்திலே சிங்கப்பூரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஆகியுள்ளது.