சன் டிவியின் வானத்தைப்போல தொடர் தற்போது டிஆர்பியில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. ஒன்றரை வருடமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டது.
அண்ணன் தங்கையாக நடித்த நடிகர்கள் இருவருமே மாற்றப்பட்டு தற்போது ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். வானத்தைப்போல சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் தற்போது மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வானத்தைப்போல தொடரில் மாமா ரோலில் நடித்து வரும் நடிகர் மனோஜ் குமார் காரில் குடும்பத்துடன் தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .
அவர் மனைவி உடன் காரில் சென்றுகொண்டிருக்க கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்திருக்கிறது. அருகில் இருந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.