‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘மன்மத லீலை’. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். </p>
இந்தப் படத்துக் கதை, திரைக்கதை வசனத்தை வெங்கட் பிரபு மற்றும் மணிவண்ணன் சுப்ரமணியம் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.