சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வசூல் ரூ. 60 கோடியை எட்டியுள்ளது.
1990 இன் தொடக்கத்தில், ஜம்மு – காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினா் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவா்களை அங்கிருந்து விரட்டியடித்தனா். பண்டிட் சமூகத்தினா் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுபம் கொ், தா்ஷன் குமாா், மிதுன் சக்கரவா்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்டோா் நடித்துள்ள இந்த திரைப்படம், மாா்ச் 11 ஆம் திகதி வெளியானது. இயக்கம் – விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.