பிக்பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் ராஜு. அவர் நடித்து வந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இவர் துபாய் செல்வது போல காட்டப்பட்டு தான் இவர் பிக் பாஸ் சென்றார்.
பிக் பாஸ் ஷோவில் அவர் செய்த விஷயங்களை ரசிகர்களை அதிகம் entertain செய்தது. அதனால் அதிகம் ஆதரவும் கிடைத்தது. அதனால் அவர் அதிகம் ஆதரவு பெற்று பிக் பாஸ் டைட்டிலையும் ஜெயித்தார்.
அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது வரை அறிவிப்பு எதுவும் வரவில்லை.
சீரியல் ரசிகர்கள் தற்போது ராஜு NINI சீரியலில் எப்போது ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று தான் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மீண்டும் சீரியல் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருப்பது போல தெரிகிறது.
தற்போது அவர் மனைவி உடன் கோவாவுக்கு டூர் சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அவர். அதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது