வெங்கட் பிரபு இயக்கி அசோக் செல்வன் நடித்துள்ள மன்மத லீலை திரைப்படத்தின் டிரெய்லர் திங்கள்கிழமை வெளியாகியுள்ளது.
ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள மன்மத லீலை திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை வெங்கட் பிரபு மற்றும் மணிவண்ணன் சுப்ரமணியம் இணைந்து எழுதியுள்ளனர்.
படத்தில் அசோக் செல்வனுடன் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்துக்கு தணிக்கைத் துறை ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் மன்மத லீலை வெளியாகவுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.