யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை ஆர்சிபி வீரர்கள் கண்டுகளித்ததாக அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது. இன்று லக்னெள அணிக்கு எதிராக மோதுகிறது.
இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள், யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தைக் கண்டுகளித்ததாக அந்த அணி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணியின் கொரோனா தடுப்பு வளையப் பகுதியில் கேஜிஎஃப் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்கள், விடியோ வெளியாகியுள்ளன.
View this post on Instagram