நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சமீபத்தில் இவர் நடித்த ஹே சினாமிகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் கர்ப்ப காலத்தில் தான் எதிர்கொள்ளும் சவால்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.