சமீபத்தில் தான் விஜய் டிவியின் செந்தூரப்பூவே தொடர் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது பலருக்கும் ஷாக் கொடுத்தது.
இந்நிலையில் தற்போது இன்னொரு பிரபல சீரியல் வரும் வாரத்தோடு முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது 400 எபிசோடுகளை கடந்து இருக்கும் வேலைக்காரன் தொடர் தான் அடுத்த வாரம் முடிவுக்கு வருகிறது. இருப்பினும் அது பற்றி இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லை.
அதற்கடுத்த வாரம் முதல் செல்லம்மா என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிகிறது.