பலவிதமான ‘ரோபோ’க்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைத்து வருகின்றன. தற்போது ஒரு ரோபோ 134 கிலோமீட்டர் தூரம் நடந்து சாதனை படைத்துள்ளது.
அந்த ‘ரோபோ’வை சீனாவை சேர்ந்த பேராசிரியர் லி குயிங்டூ தலைமையிலான குழுவினர் வடிவமைத்துள்ளனர். இவர்கள் சாங்குயிங் பல்கலைக்கழகத்ன் தகவல் தொடர்பு துறையை சேர்ந்தவர்கள்.
இவர்கள் 4 கால்களை கொண்ட ‘ரோபோ’வை தயாரித்துள்ளனர். அது 54 மணி நேரத்தில் 134 கிலோ மீட்டர் தூரம் நடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இந்த ‘ரோபோ’வுக்கு ‘ஷிங்ஷி நம்பர் 1 அல்லது வால்கர்–1’ என பெயரிட்டுள்ளனர்.