2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக உலகளாவிய ஊழல் போக்கு குறியீட்டின் தரவரிசைப் பட்டியல் தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது.
2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளில் பட்டியலில் மொத்தம் 168 நாடுகள் உள்ளன. இதில், 9 இடங்கள் முன்னேறி இந்தியா 76-வது இடத்தை அடைந்துள்ளது.
சீனா 83-வது இடத்திலும், வங்கதேசம் 139-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் சிறிதளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில், நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்தது.
தாய்லாந்து, பர்கினோ பாசோ, பிரேசில், துனிசியா, ஜாம்பியா ஆகிய நாடுகளும் இதே இடத்தில் இருக்கின்றன. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன.