கன்னட ஊர்பேர் கொண்ட மலையாள ரீமேக் பட சந்திப்பின் போது தமிழ்ப் படங்களை அங்கே கொண்டு போகும் எண்ணம் இல்லையா என கேட்டால். நான் ஏன் இங்கிருக்கும் படங்களை அங்கே கொண்டு போக வேண்டும் என இயக்குநர் கேட்டுள்ளது தமிழ் சினிமா படைப்பாளிகளை கொஞ்சம் கோபமாக்கியுள்ளது.ஆங். என்ன துணிச்சல்!
பிரம்மாண்ட இயக்குநரின் அறிவியல் படத்திற்கு நம்பரைப் பெயராக வைத்துள்ளனர். ஏன் பாகம் இரண்டு தானே அதே தலைப்பை வைத்தால் என்ன என்றால், முதல்பாகத்தைத் தயாரித்த நிறுவனம் படத்தின் பெயரை விட்டுக்கொடுக்க வார்த்தையளவில் கூட சம்மதம் தெரிவிக்காது போகவே மன உளைச்சலுடன் நம்பரையே படத்துக்குத் தலைப்பாக வைத்துவிட்டார்கள் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. கடலுக்கே தண்ணி இல்லைன்னா எப்படி?
பாட்டு கூட வேண்டாம் படத்தை வெளியிடலாம்னு விரலு நடிகரும் அவரோட குடும்பமும் தயாராக இருந்தாலும் பாடல் படுத்தும் பாட்டால் இன்னும் ஒரு சில மாதத்துக்கு படத்தின் ரிலீஸ் குறித்து பேசக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படம் ரிலீஸ், அதற்கான சந்திப்பில் கூட இந்த பீப் பாடல் தான் வந்து நிற்கும் என்பதால் இந்த வருட இறுதிக்குக் கூட பட ரிலீஸ் போகும் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள். ஆனி போயி ஆடி வந்தா நேரம் சரியாகுமா?