கடந்த ஆண்டு இணையத்தில் வைரலாகப் பரவிய ஐஸ் பக்கெட் சேலஞ்சை முயற்சித்து பலர் பலியான நிலையில், தற்போது ‘டக்ட் டேப் சேலஞ்ச்’ என்ற மற்றொரு விபரீத விளையாட்டு மேற்கத்திய இளைஞர்களிடையே பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் முழுக்க டேப்பால் சுற்றப்பட்ட நபர், எவ்வளவு நேரத்தில் அதிலிருந்து தப்பித்து வெளியே வருகிறார் என்பதை செல்போன் டைமர் மூலமாக கணக்கிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து லைக்ஸ் அள்ளுவதுதான் இந்த டக்ட் டேப் சேலஞ்சின் நோக்கம். இந்த சேலஞ்சை முயற்சித்த வாஷிங்டனைச் சேர்ந்த ஸ்கைலர் பிஷ் என்ற 14 வயது வாலிபரின் இடது கண் பார்வை நிரந்தரமாகப் பறிபோகியுள்ளது.
என் மகன் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று கண்ணீர் விடும் இவரது தாயாரான சாரா பிஷ் தயவு செய்து இனியாவது இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்த விளக்க வீடியோ: