தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் பலரும் விஜய், அஜித்துடன் இணைந்து பணியாற்றவே விரும்புவார்கள். ஏனெனில் இவர்களின் ரசிகர்கள் பலம் அப்படி.
இந்நிலையில் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ என தொடர்ந்து தரமான படங்களை இயக்குபவர் சசி. இவர் இயக்கத்தில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பிச்சைக்காரன்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், விஜய்-அஜித் இவர்களில் யார் உங்களது முதல் தேர்வாக இருக்கும் என கேட்க, ‘நான் இப்போது தான் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றியுள்ளேன், விரைவில் விஜய்யுடன் பணியாற்ற விரும்புகிறேன்’ என கூறியுள்ளார்.