சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் பல படங்களில் ஆரம்பத்தில் இணைந்து நடித்தார்கள். ஆனால், இருவரும் நல்ல உயரத்தை அடைந்த பிறகு எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் 2.0 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர் கமலை தான் அனுகியுள்ளார். ஆனால், இதில் கமல் நடிக்க மறுத்துவிட்டார்.
இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் இணைந்து நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை எங்களில் ஒருவர் தான் தயாரிக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருந்தோம், அதன் காரணமாகவே நடிக்க மறுத்தேன்’ என கூறியுள்ளார்.