ஹிட்லர் தனது தளபதிகளுடன் ரகசியங்களை பரிமாற பயன்படுத்திய இயந்திரத்தின் பாகம் எதிர்பாராதவிதமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் இடையில் உயர் ரகசிய செய்திகளை பரிமாறி கொள்ள பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தின் பாகம் ஒன்று இங்கிலாந்தில் ஒரு தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் பரவலாக தெரிந்த எனிக்மா இயந்திரத்தை விட பெரியதும், சிக்கலானதுமான லோரன்ஸ் சிப்பர் இயந்திரத்தின் தட்டச்சு பலகைதான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தட்டச்சு பலகைதான் 9.50 யூரோவிற்கு இணையான விற்பனை நிறுவனமான இபே-யில் விலைக்கு வந்தது.
இந்த தட்டச்சு பலகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட லண்டன் தேசிய கணினி அருங்காட்சியகத்தின் தன்னார்வ தொண்டர்கள் அதை வாங்கியுள்ளனர். மேலும் இந்த தட்டச்சு பலகையின் முக்கிய மோட்டர் இயந்திரத்தை கண்டறிய உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது கண்டறியப்படால் சங்கேத மொழி பகுப்பாய்வு வழிமுறையை அவர்கள் மீண்டும் உருவாக்க முடியும்.