சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் Stand Up காமெடியனாக அறிமுகமானவர் மதுரை முத்து.
அனைவரையும் கவர்ந்த இவர் சில காமெடி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி ஒரு விபத்தில் மரணமடைந்தார்.
இதனால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இவரின் திருணம் உண்மைதானாம்.
மணப்பெண் நிவேதா மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவராம். பல் டாக்டராக இருக்கும் இவர் மதுரையில் சில லோக்கல் சேனல்களில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளாராம்.
இவர்களின் திருமணம் மதுரை திருமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் நடந்தது என கூறப்படுகிறது.