விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ´தர்மதுரை´ படம் நல்ல வரவேற்பை பெற்று, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் சில நாட்கள் நடித்துள்ளார்.
ஆனால் வலி அதிகமாகவே தற்போது மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறாராம் அவர். தர்மதுரை படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ளும் போது கூட காலில் Knee-pad அணிந்து தான் வந்தார்.