ஐ.சி.சி.யின் சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நம்பர்-1 இடத்தை இழந்து 3-வது இடத்திற்கு சரிந்திருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார். முதல் பத்து இடங்களில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என இரண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் தென்னாபிரிக்காவின் அதிவேக பந்து வீச்சாளர் ஸ்டெயின் தான் இழந்த நம்பர்-1 இடத்தை மீண்டும் எட்டிப்பிடித்திருக்கிறார். நேற்று செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 33 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை ஸ்டெயின் வீழ்த்தியது அவருக்கு மீண்டும் நம்பர்-1 இடத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்திய விளையாட்டு வீரர் அஜிங்கியா ரகானே தொடர்ந்து 8-வது இடத்திலேயே நீடித்து வருகிறார்.
டெஸ்ட் அணிகள் தரவரிசையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-வது இடத்தில் நீடிக்கிறது.