நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகள் பெயர், கீர்த்தி. ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. சென்னையை சேர்ந்த சுதர்சன்-விஜயஸ்ரீ தம்பதிகளின் மகள். ஜெயசித்ராவுக்கு நெருங்கிய உறவுப்பெண்.
அம்ரிஷ்-கீர்த்தி திருமணம், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில், 19-ந் திகதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6-30 மணிக்கு அதே மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அம்ரிஷ், ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிகளின் ஒரே மகன். ஜெயசித்ரா டைரக்டு செய்த ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானதுடன், அந்த படத்துக்கு இசையும் அமைத்தார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா,’ பரத் நடிக்கும் ‘பொட்டு,’ மற்றும் ‘சத்ரு’ உள்பட 10 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.