பிரபல இந்திப்பட நடிகை பிபாஷாபாசு. 37 வயதான இவர், கடந்த ஏப்ரல் 30-ந் திகதி துணை நடிகராக நடித்து வந்த கரன்சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பிபாஷாபாசுவுக்கு பேஸ்புக், மற்றும் டுவிட்டரில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.
இந்தநிலையில் பிபாஷாபாசு டுவிட்டரில் தனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எங்கும் செல்லமுடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் குடும்ப டாக்டரிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும், கணவர் தன்னை அன்பாக கவனித்து கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.