இந்தியாவில் வர்த்தக பெயர் கொண்ட தங்க நாணயங்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஒரு சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரிகள் வாரியம் நேற்று அறிவித்தது.
ஏற்கனவே சுங்க வரி அல்லது உற்பத்தி வரி செலுத்தப்பட்ட தங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட, 99.5 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட தூய்மை கொண்ட, வர்த்தக பெயர் தாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
இதன்மூலம், தங்க நாணயங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல், வர்த்தக பெயர் கொண்ட வெள்ளி நாணயங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு நீடிக்கும்.