பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் இடையேயான காதல் அனைவரும் அறிந்தது தான். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டி20 அரையிறுதிப் போட்டிக்கு முன் விராட் கோலி ஒரு டுவீட் செய்திருந்தார்.
அதில் “அனுஷ்கா சர்மாவைக் கேலி செய்பவர்களைக் கண்டு அருவருப்படைகிறேன். அவர் எனக்கு பாசிட்டிவ் ஆகத்தான் இருக்கிறார்´´ என்று கோபத்துடன் டுவீட் செய்தார். அனுஷ்கா சர்மாவைக் கிண்டல் செய்தவர்களைத் திட்டி விராட் கோலி செய்திருந்த இந்த டுவீட் 39,732 ரீ-டுவீட்களையும், 1,07,232 லைக்குகளையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் ´கோல்டன் டுவீட்´ ஆக இந்த டுவீட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரின் தெற்காசிய பிரிவு மேலாண்மை இயக்குநர் மாயா ஹரி உறுதி செய்துள்ளார்.