சோனி நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியா XA மாடலின் மேம்படுத்தப்பட்ட போன் என்பது, வெளியான புகைப்படங்களின் மூலம் தெரியவந்திருக்கிறது.
வித்தியாசமான வடிவமைப்பிற்கு பெயர்போன சோனி, தனது இரண்டாம் தலைமுறை எக்ஸ்பீரியா XA ஸ்மார்ட்போனிலும் அழகிய தோற்றம் மற்றும் அதிநவீன தோற்றத்தை கொண்டிருக்கிறது. வடிவமைப்பு சார்ந்து பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் சோனி ஸ்மார்ட்போன் ஆனது 5 இன்ச் அளவு மற்றும் யுஎஸ்பி டைப் சி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. முன்னதாக வெளியான தகவல்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சோனி நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்றும் கூறப்பட்டது.