ஒரு பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இது வெறும் பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இல்லாமல், மனிதர்களில் உளவியலை எளிதாக புரிந்துகொள்ளவும் உதவுவதாக பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
நடிகர் கருணாகரன் இது பற்றி ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் “பிக் பாஸ் எனக்கு கற்றுத்தந்தது – டென்ஷன் ஆகும்போது ஷட்டப் பண்ணுங்க, ஓவியா போல வாழ்க்கை கூலாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.