BiggBoss நிகழ்ச்சியை அடுத்து ஓவியாவிற்கு நிறைய ரசிகர்கள் வந்துவிட்டனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் பிரபல மாலுக்கு சென்றுள்ளார், அங்கு ரசிகர்களுடன் நிறைய புகைப்படங்களும் எடுத்திருக்கிறார். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு ஆதரவாக பல டுவிட்டுக்கள் செய்தார் சிம்பு.
அதோடு சிம்பு, ஓவியாயை திருமணம் செய்ய தயார் என்று டுவிட் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் சிம்பு போட்டதாக கூறப்பட்ட அந்த டுவிட்டர் பக்கம் போலி என்பது உறுதியாகியுள்ளது.
இதோ வைரலாக பரவிய அந்த போலி டுவிட்.
தற்போது இந்த போலி தகவல் குறித்து சிம்பு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.