விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி அமோகமாக வசூல் சாதனை செய்து வருகிறது. நேற்று நவம்பர் 9ம் தேதி இப்படம் தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
விஜய் படங்கள் எப்போதும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு குறிப்பிட்ட ஒரு யூடியூபில் வெளியாவது வழக்கம். அதேபோல் விஜய் நடித்த சுறா படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகி 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது இப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆனால் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட சுறா படம் வரும் நவம்பர் 10ம் தேதி தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதால் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாம்.