இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல இவரை காதலித்து வரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் பல ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் நடிகை சகாரிகா திருமணம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.