அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அஜித் துப்பாகி சுடும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ‘விஸ்வாசம்’ படத்திற்காக தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் அஜித் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் கேங்ஸ்டர் பற்றிய கதையாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படம் தீபாவளி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.