தண்ணீரில் வித்தை காட்டிய இளைஞர் ஒருவரது அசத்தல் வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பலூன் ஒன்றை தனது காலுக்குள் நுழைத்து அதனுல் தண்ணீரை நிரப்புகிறார். பலூனில் அதிகப்படியான தண்ணீர் நிரம்புகிறது. அப்போது பலூனை தனது கழுத்து வரை நுழைத்து மேலும் தண்ணீரை நிரப்புகிறார். ஒரு கட்டத்தில் பலூன் வெடித்துச் சிதறுகிறது. இக்காட்சிகள் ஸ்லோமோசன் வீடியோ கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நொடியில் வெடித்துச் சிதறும் தண்ணீர், ஸ்லோமோசனின் போது அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் படு வைரலாக பரவி வரும் இந்த வீடியோ பதிவு “தி ஸ்லோமோ கைஸ்” எனும் யூட்டியூப் சேனலில் 4 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.