பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் இந்தியில் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், நீர்ஜா’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்மேன்’. தற்போது, சோனம் கபூர் ‘வீரே டி வெட்டிங்’, ‘ஏக் லடுகி கோ தேகா தூ ஐசா லகா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சோனம் கபூருக்கும் அவரது நீண்ட நாள் காதலரான ஆனந்த் அஹுஜாவிற்கும் வருகிற மே 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களது திருமணம் ஜெனிவா நாட்டில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.