பத்மாவதி படம் மூலம் நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார். சர்ச்சைக்கு நடுவிலும் படம் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகையான இவர் நடிகர் ரன்வீர் உடன் காதலில் இருக்கிறார் என நீண்ட நாட்களாக செய்திகள் சுற்றி வந்தபடி இருக்கிறது. பத்மாவதி படத்தால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
இந்நிலையில் லண்டனில் தீபிகாவும் ரன்வீரும் ஜோடியாக ஷாப்பிங் செய்துள்ளார்களாம். தீபிகா தன் சகோதரி மற்றும் அம்மாவுடன் திருமண நகைகளை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
இதனால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.