நடிகர் ஆர்யா தற்போது எங்க வீடு மாப்பிள்ளை என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் அவரை இம்ப்ரஸ் செய்ய 5 பெண்கள் தற்போது பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியால் தற்போது அந்த தனியார் தொலைக்காட்சியின் டிஆர்பி எகிறியுள்ளது. சமீபத்தில் தொடக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி தற்போது டிஆர்பியில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 106234 ஆயிரம் பேர் இந்த தொலைக்காட்சியை பார்த்துள்ளனர்.