உலகப்புகழ் பெற்ற DJ வெறும் 28 வயதில் திடீர் மரணமடைந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. DJ Avicii மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை மதியம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இசையமைப்பாளர் அனிருத் DJ Aviciiயின் மரணத்தால் துயரத்தில் மூழ்கியிருப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.