தவாங்கிரி என்ற இடத்தில் கன்னட சினிமாவின் பிரபல தொகுப்பாளர் சந்தன் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
34 வயதான இவர் தன் வீட்டிற்கு போவதற்காக தன்னுடன் 2 தொலைக்காட்சி நடிகர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார். சந்தன் காரை வேகமாக ஓட்டிக் கொண்டு செல்லும்போது எதிர்ப்பாராத விதமாக வண்டி அங்கிருந்த லாரியின் மேல் மோசமாக மோதியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே சந்தன் உயிரிழந்துள்ளார்.
பலரின் மனம் கவர்ந்த இவரின் மரண செய்தியை கேட்டதும் ரசிகர்கள் மிக வருத்தத்தில் உள்ளனர்.