பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியே போவது என்பதற்காக நாமினேஷன் இன்று நடைபெற்றது.
வைஷ்ணவி, சென்ட்ராயன், ஜனனி மற்றும் டேனியல் ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
வீட்டின் தலைவர் ஐஸ்வர்யா நேரடியாக ரித்விகாவை எலிமினேஷன் லிஸ்டில் தேர்வு செய்தார். அதனால் இந்த வாரம் மொத்தம் 5 பேர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
யார் வெளியேற்ற படுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியவரும். மேலும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக யாராவது புதிய போட்டியாளர் உள்ளே இந்த வாரம் வரலாம் என கூறப்படுகிறது.