ஒஸ்வோ (OZO) என்று பெயரிடப்படுள்ள மிகவும் சக்தி வாய்ந்த 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3டி கேமிராக்களை வெளியிட்டுள்ளது நோக்கியா.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த புதிய கேமிரா வெளியிடப்பட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹேண்ட்செட்டுகளில் 3டி திரைப்படங்கள் மற்றும் கேம்களை பார்க்கும் வகையில் வடிவடைக்கப்பட்ட புதிய கோள வடிவ கேமிராவை வெளியிட்டுள்ளது நோக்கியா.
இந்த புதிய நவீன கேமிரா 360 டிகிரியில் வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்யும் திறன் வாய்ந்தது. இதில் 8 சென்சார்கள் மற்றும் மைக்குகள் உள்ளன. இதன் மொத்த எடை 2.7 கிலோ.
ஆனால், உலகிலேயே சக்திவாய்ந்த வி.ஆர்.( virtual reality ) கேமிராவாக இது கருதப்படுவதால் இந்த கேமிராக்கள் இந்த ஆண்டு கடைசியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.