ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகர் Ajaz Khan. இவர் சூர்யாவின் ரத்த சரித்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
இவரை நேற்று போலீசார் ஹோட்டல் அறையில் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் 9 வைத்திருந்ததாக அவர் கைதாகியுள்ளார். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தவுள்ளனர் போலீசார்.
2016ல் இவர் ஒரு பெண்ணுக்கு தவறான மெசேஜ்கள் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.