விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா ஸ்ரீ. இவ்விரு படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான வெர்ஜின் பசங்க என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் இவர் பேசும் வசனம் இளைஞர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது.
தற்போது இந்தியில் ஆல்பம் சாங் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இவரே நடித்து, தயாரித்து பாடல் பாடியும் இருக்கிறார். தற்போது இந்த ஆல்பம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த ஆல்பத்தில் உதடு முத்த காட்சியிலும் மனிஷா ஸ்ரீ நடித்துள்ளார்.